சென்னை:

மிழகம் மற்றும் புதுச்சேரியில் எஸ்எஸ்எல்சி எனப்படும் 10வது வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படுகிறது. நாளை காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் பார்க்கலாம்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில்  கடந்த மார்ச் மாதம் 16-ம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெற்றது. இத்தேர்வை   மொத்தம் 10 லட்சத்து 1,140 பேர் எழுதினர். 12 ஆயிரத்து 337 பள்ளிகளில் இருந்து 9 லட்சத்து 64 ஆயிரத்து 491 மாணவர்களும், 36 ஆயிரத்து 649 தனி தேர்வர்களும், 5 திருநங்கைகளும், 186 சிறை கைதிகளும்  எழுதினர்.

இந்நிலையில், எஸ்எஸ்எல்சி  தேர்வு முடிவுகள் நாளை வெளியிடப்படும் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார்.

தேர்வு முடிவுகள் வெளியாக உள்ள இணையதள முகவரிகள்:

www.tnresults.nic.in, 

www.dge.tn.nic.in 

www.dge.tn.gov.in ஆகிய இணையதள முகவரிகளில் பார்க்கலாம்.

தேர்வு எழுதியோர், தங்களின் பதிவு எண், பிறந்த தேதி, மாதம், ஆண்டு பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளிகளில் சமர்ப்பித்த உறுதிமொழி படிவத்தில் குறிப்பிட்டுள்ள அலைபேசி எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., ஆக தேர்வு முடிவு வெளியாகும்.

தனித்தேர்வர்கள் ஆன்லைன் விண்ணப்பத்தில் வழங்கிய மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ், ஆக தேர்வு முடிவு அனுப்பி வைக்கப்படும்.