ஆரணி அருகே 11,620 லிட்டர் எரிசாராயம் பறிமுதல்! 3 பேர் கைது

வேலூர்:

ரணி அருகே உள்ள கிராமத்தில் சுமார் 11,620 லிட்டர் எரிசாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு ரூ.1 கோடி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக  3 பேர் கைது  செய்யப்பட்டு உள்ளனர்.

வேலூர் அருகே ஆரணியில் இருந்து சேத்துப்பட்டு செல்லும் நெடுஞ்சாலை அருகே உள்ள நெசல் கிராமத்தில் எரிசாராயம் கடத்தப்படுவதாக புகார் எழுந்தது. சம்பவத்தன்று, அங்கு ஒரு டேங்கர் லாரியில் இருந்து  எரிசாராயம், கேன்களில் நிரப்பப்படுவதாகவும் விழுப்புரம் மத்திய தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் சென்றது.

இதைத்தொடர்ந்து விரைந்து வந்த காவல்துறையினர், குறிப்பிட்ட லாரியை கண்காணித்து, மடக்கி பிடித்தனர்.  அங்கு மேலும் மினி வேன் உள்பட 5 வாகனங்களும், 4 மோட்டார் சைக்கிள்களும் இருந்தன. அப்போது அங்கிருந்தவர்கள் பலர் தப்பி ஓடிய நிலையில், அங்கு கைப்பற்றப்பட்ட  டேங்கர் லாரி எண் மற்றும் மோட்டார் சைக்கிள் எண்களை வைத்து அவற்றின் உரிமையாளர்கள் யார்? இதில் தொடர்புடையவர்கள் யார் என போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதைத்தொடர்ந்து எரி சாராயம் கடத்தியதாக 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

பறிமுதல் செய்யப்பட்டுள்ள எரிசாராயம் மற்றும் வாகனங்களின் மொத்த மதிப்பு ரூ.1 கோடி என்று கூறிய போலீசார்,   விஜி மற்றும் சம்பத் மற்றும் ராமச்சந்திரன் என்ற 3 பேரை கைது செய்துள்ளனர். இவர்கள் மூவரும் திருவண்ணாமலை சேர்ந்தவர்கள். பறிமுதல் செய்யப்பட்ட எரிசாராய லாரி, வியாபாரி ராமச்சந்திரனுக்கு சொந்தமானது என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் தலைமையிலான குழு, ஆரணி- வில்லுபுரம் சாலையை நோக்கிச் செல்லும் ஒரு கொள்கலன் லாரி ஒன்றைக் கண்டது, அது நேசால் கிராமத்தை நோக்கி திரும்பி ஒரு ஏரியை நோக்கி சென்றது. அதை கண்காணித்த போலீசார், தொடர்ந்து வந்து லாரியை மடக்கினர்.

இதுதொடர்பாக சம்பந்தப்பட்டவர்கள் மீது எரிசாராய சட்டப்பிரிவின் பிரிவு 4 (1) (ஆஆ) மற்றும் 4 (1-ஏ) மற்றும் பிரிவு 6 மற்றும் 7 ஆகியவற்றின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுஉள்ளதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.