சென்னை: அதிமுக அரசின் கடைசி பட்ஜெட்டாக, இன்று இடைக்கால பட்ஜெட் துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வத்தால் தாக்கப்பட்டுள்ள நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர்  பிப்ரவரி 25 முதல் 27ந்தேதி வரை நடைபெறும் என  சபாநாயகர் தனபால் அறிவித்துள்ளார்.

15-வது தமிழக  சட்டப்பேரவையின் பதவிக்காலம் மே 24-ம் தேதியுடன் முடிவடைகிறது. அதற்கு முன்னதாக சட்டமன்ற தேர்தல் நடத்தப்பட்டு புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இந்த நிலையில், தமிழக அரசின்  2021-22 நிதியாண்டின் இடைக்கால பட்ஜெட் இன்று சட்டப்பேரவையில்  நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பன்னீர்செல்வத்தால் தாக்கல் சய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, பட்ஜெட் தொர்பான விவாதத்துக்கு,  எத்தனை நாட்கள் சபையை நடத்தலாம் என்பது குறித்து சபாநாயகர் தலைமையிலான  பேரவை அலுவல் ஆய்வுக்குழு கூடி விவாதித்தது. அதையடுத்து, சபாநாயகர் சட்டப்பேரவையில் அறிவிப்பு வெளியிட்டார்.

அதன்படி,  பிப்ரவரி 25 முதல் பிப்ரவரி 27 வரை தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெறும் என்றும், பிப்ரவரி 25ஆம் தேதி சித்த வைத்தியர் சிவராஜ் சிவக்குமார் மறைவுக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதேபோல் பட்டாசு ஆலை விபத்தில் இறந்தவர்கள், உத்தராகண்ட் வெள்ளத்தில் உயிரிழந்தவர்களுக்கும் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்படும். அதைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும்,  தொடர்ந்து, 26ஆம் தேதியும் பட்ஜெட் மீதான விவாதம் நடைபெறும் எனவும், பிப்ரவரி 27ஆம் தேதி பட்ஜெட் விவாதத்திற்கு பதிலுரை வழங்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.