சென்னை:

மிழகத்தில் உள்ள  45 அரசு கலைஅறிவியல் கல்லூரிகளில் கூடுதலாக 4500 இடங்கள் நடப்பு ஆண்டில்  சேர்க்கப்பட்டு உள்ளதாக  தமிழக உயர்கல்வித் துறை அறிவித்து உள்ளது.

சமீப காலமாக பொறியியல் மோகம் குறைந்து கலைஅறிவியல் படிப்பில் மோகம் அதிகரித்துள்ள நிலையில், மாணவர்கள் சேர்க்கையை கூட்டும் வகையில், பல கலை அறிவியல் கல்லூரிகள் கோரிக்கை  விடுத்து வந்தன. அதை ஏற்பட்டு, தற்போது 4500 சேர்க்கை இடங்கள் அதிகரிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தமிழக கல்லூரிக் கல்வி இயக்குநர் சி.ஜோதி வெங்கடேஷ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

அரசு உத்தரவின்படி, 45 அரசு  கல்லூரிகளில் 69 புதிய இளங்கலை படிப்புகள் மற்றும் 12 முதுகலை படிப்புகளுக்கு உயர்கல்வித் துறை ஒப்புதல் அளித்துள்ளது. மேலும், இந்த படிப்புகளை நடத்துவதற்கு 167 உதவி பேராசிரியர்களும் நியமிக்கப்படுவார்கள் என்று தெரிவித்து உள்ளது.

“அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கு இந்த ஆண்டு அதிக விண்ணப்பங்கள் வந்துள்ள நிலையில், தற்போது சேர்க்கை அதிகரிக்கப்பட்டு உள்ளதாகவும்,  கோரிக்கையின் அடிப்படையில், கல்லூரிகளுக்கு புதிய படிப்புகளுக்கு வழங்கப்பட்டு இருப்பதாகவும் தெரிவித்து உள்ளார்.

ஏற்கனவே கடந்த ஆண்டும், பல கல்லூரிகளில் வர்த்தக துறைகளுக்கு கூடுதல் பிரிவுகளை இயக்குநரகம் அனுமதித்திருந்தாகவும்,   இந்த ஆண்டு, பல கல்லூரிகளுக்கு பொருளாதாரம், வரலாறு, வேதியியல் மற்றும் இயற்பியல் ஆகிய புதிய படிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.