சென்னை:

மிழகத்தில் இந்த ஆண்டு முதல் வேளாண் படிப்புக்கும் ஆன்லைன் மூலம் மாணவர்கள் சேர்க்கை நடைபெறும் என்று தமிழக அரசு அறிவித்து உள்ளது.

இந்த ஆண்டு முதல் பொறியியல் படிப்புக்கு மாணவர்கள் சேர்க்கை ஆன்லைன்மூலம் நடைபெறும் என்றும், ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும் தமிழக உயர்கல்வித்துறையும், அண்ணா பல்கலைக்கழக மும் அறிவித்து உள்ளது.

இந்நிலையில் வேளாண் படிப்புக்கு ஆன்லைன் மூலம் கலந்தாய்வு நடத்தப்படும், வேளாண் பல்கலைக்கழக துணை வேந்தர்  ராமசாமி அறிவித்து உள்ளார்.

இந்த ஆண்டு வேளாண் படிப்புக்கு வரும் 17ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்றும், விண்ணப்பபங்கள் ஆன்லைன் மூலமே விண்ணப்பிக்க வேண்டும் என்றும், அதுபோல மாணவர்கள் சேர்க்கையும் ஆன்லைன் மூலமே நடைபெறும் என்றும் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்தில் வேளாண் படிப்புக்கு 2500 இடங்கள் உள்ளதாகவும், அவை அனைத்தும் ஆன்லைன் மூலமே நிரப்பப்படும் என்றும் கூறினார்.