தமிழகம் புதுவையில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்

சென்னை:

மிழகம் புதுவையில் ஓரிரு இடங்களில் வெப்பச்சலனம் காரணமாக  இடியுடன் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கி உள்ளது. ஆனால் சென்னை போன்ற பல இடங்களில் மழை பெய்யாமல் தண்ணீர் பஞ்சத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்த நிலையில்,  தென் மேற்கு பருவமழை காரணமாக,  நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மாவட்ட மலைப் பகுதிகளில் கனமழைக்கும், மேற்கு தொடர்ச்சி மலை பகுதிகளில் பரவலாக மழைக்கும் வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் அறிவித்து உள்ளது.

சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மாலை அல்லது இரவில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்து உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் சின்னக்கல்லாரில் 10 சென்டிமீட்டர் மழையும், வால்பாறையில் 9 சென்டிமீட்டரும், நடுவட்டத்தில் 4 சென்டிமீட்டரும், பெரியார், தேவாலாவில் 3 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

இவ்வாறு சென்னை வானிலை மையம் அறிவித்து உள்ளது.