கொரோனா முன்னெச்சரிக்கை: வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை அழைத்துச் செல்ல பேருந்து வசதி…

சென்னை:

கொரோனா பரவல் அச்சுறுத்தல் காரணமாக, சென்னை சர்வதேச விமான நிலையத்தில், வெளிநாடுகளில் இருந்து வரும் விமான பயணிகளை அழைத்துச் செல்லும் வகையில் பிரத்யேக பேருந்து வசதி செய்யப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில்,  மத்திய மாநில அரசுகள் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்  எடுத்து வருகின்றன.

அதன் ஒரு பகுதியாக சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கு அங்கு மருத்துவ சோதனை நடைபெற்றபிறகு, அவர்களை சிறப்பு பேருந்தில் அழைத்துச்சென்று அவர்களின் வீடுகளில் விடப்பட்டு வருகின்றனர்.. வீடுகளில் அவர்கள் தனிமைப்படுத்த அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

இதற்காக சென்னையில் சில பேருந்துகள் ஒதுக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்துகளின் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்திருப்பதுடன், பேருந்துகள் சுத்தப்படுத்தப்பட்டு கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது.