சென்னை:

மிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையுடன், 22 சட்டமன்ற இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையும் நடைபெற்று வருகிறது.

இதில் முதல் வெற்றியாக ஆம்பூர் தொகுதி திமுக வேட்பாளர் விஸ்வநாதன் வெற்றி பெற்றுள்ளார். ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் 5 முனை போட்டி நிலவியது.

திமுக சார்பில்  விஸ்வநாதன், அதிமுக சார்பில்  அதிமுக  சார்பில் ஜோதி ராமலிங்க ராஜா,  அமமுக சார்பில்  பாலசுப்ரமணி, நாம் தமிழர் -கட்சி வேட்பாளர் ந.செல்வமணி, மக்கள் நீதி மய்யம்  வேட்பாளர்  நந்தகோபால் ஆகியோர் உள்பட 10 வேட்பாளர்கள் களத்தில் நின்றனர்.

இன்று காலை முதலே ஆம்பூர் தொகுதியில் முன்னிலை வகித்து திமுக, இறுதியாக 36585 வாக்குகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளரை தோற்டிகத்து வெற்றி பெற்றார்.

விஸ்வநாதன், – திமுக – 94904 வாக்குகள் 

அதிமுக – ஜோதி ராமலிங்க ராஜா – 58319 வாக்குகள்

அமமுக – பாலசுப்ரமணி – 8819 வாக்குகள் 

நாம் தமிழர் – ந.செல்வமணி – 3102 வாக்குகள்

மக்கள் நீதி மய்யம் – நந்தகோபால் 1840 வாக்குகள் பெற்றிருந்தனர்.

அமமுக வேட்பாளர் ஆர். பாலசுப்ரமணி 2016ம் ஆண்டு தேர்தலின் போது அதிமுக சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏவாக தேர்வு செய்யப்பட்டார்.  அப்போது 28006 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றவர் தற்போது தவெறும் 9919 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வியை சந்தித்துள்ளார்.