சேலம்:  தமிழக முதல்வர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது சொந்த தொகுதியில் இருந்து இன்று முதல்கட்ட தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் 5 மாதங்களில் நடைபெற உள்ளது. இதையொட்டி, தமிழத்தில் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. திமுக உள்பட பல அரசியல் கட்சிகள் ஏற்கனவே தேர்தல் பிரசாரத்தை முன்னெடுத்துள்ளன. இந்த நிலையில், அதிமுக சார்பில் இன்று முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தமது சொந்தத் தொகுதியான எடப்பாடியில் இன்று தேர்தல் பிரச்சாரத்தைத் தொடங்குகிறார்.

முதலல்வர், எடப்பாடி பழனிசாமி ஒவ்வொரு தேர்தலிலும் எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பெரியசோரகையில் உள்ள கோவிலில் சாமி கும்பிட்டுவிட்டு,  தேர்தல் பிரசாரத்தை தொடங்குவது வழக்கம். அதுபோல, இன்று காலை 9 மணிக்கு அங்கு செல்லும் சாமி கும்பிட்டு விட்டு, அந்த பகுதியில் அமைக்கப்பட்டுள்ள  அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து தேர்தல் பிரசாரத்தை தொடங்குகிறார். இதில் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

தொடர்ந்து எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களிலும் மினி கிளினிக்குகளைத் திறந்து வைத்து சிறப்புரையாற்றுகிறார். முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பிரசாரம் செய்யும் இடங்களில் கூடுதல் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.