சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தலையொட்டி, வேட்பாளர்கள் நேர்காணல் நடத்துவருகின்றன. இந்த நிலையில், திமுக, அதிமுக கட்சிகள் தங்களது கட்சியின் மாவட்டச் செயலாளர்களுடன் இன்னு முக்கிய ஆலோசனை நடத்துகின்றனர். இந்த ஆலோசனை கூட்டத்தில், தேர்தல் பரப்புரை, வேட்பாளர்கள், பூத் கமிட்டி அமைப்பது உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை காலை 9 மணிக்கு, திமுக மாவட்ட கழக செயலாளர்கள் கூட்டம் காணொலி வாயிலாக நடைபெறும் என்று திமுகவின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

இதுதொடர்பாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில், தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று  (5-3-2021, வெள்ளிக்கிழமை) காலை 9.00 மணி அளவில், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெறும். அப்போது மாவட்டக் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் அனைவரும் தவறாமல் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்” என்று அதில் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறும் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் மார்ச் 7-ல் திருச்சியில் நடைபெறும் பொதுக்கூட்டம் குறித்து ஆலோசிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம்

அதிமுகவில் நேற்று ஒரே நாளில் ஆயிரக்கணக்கான வேட்பாளர்களுக்கு நேர்காணல் நடைபெற்ற நிலையில், இன்று மாவட்டச் செயலாளர்களுடன், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதல்வர் ஓபிஎஸ் உள்பட கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்துகினற்னர்.

இன்றைய ஆலேசானை கூட்டத்தில், அதிமுக கூட்டணி கட்சிகள் அமைச்சர்களின் தொகுதிகளை குறிவைத்து கேட்பதாக கூறப்படுவது பற்றியும்,  அதிமுக வேட்பாளர்களை இறுதி செய்யவும், சட்டமன்ற தேர்தலில் சீட் கிடைக்காதவர்களுக்கு உள்ளாட்சி தேர்தலில் சீட் தருவது குறித்தும் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசிக்கப்படலாம் என கூறப்படுகிறது. தமிழக சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட 8 ஆயிரத்து 200 பேர் விருப்ப மனுவை தாக்கல் செய்திருந்து குறிப்பிடத்தக்கது.