சென்னை: தமிழக சட்டமன்றதேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெற உள்ள நிலையில்,  தஞ்சை மண்டலத்தில் நாம் தமிழர் கட்சி சார்பில் போட்டியிடும் 35 வேட்பாளர்களின் பெயர்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்து உள்ளார். தமிழக அரசியல் கட்சியில் வேட்பாளர்களின் பெயர்களை அறிவித்த முதல் அரசியல் கட்சியாக நாம் தமிழர் கட்சி திகழ்கிறது.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுத்து வருகின்றன. இந்த நிலையில், நாம் தமிழர் கட்சி சார்பில் முதன் முதலாக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

தஞ்சாவூரில் செய்தியாளர்களிடம்  பேசிய சீமான், தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் போட்டியிடும் ஒரே கட்சி, நாம் தமிழர் மட்டுமே  என்று கூறியவர், அடிப்படை மாற்றத்தையும், தூய அரசியலையுமே விரும்புகிறோம் என்றார்.   நாம் தமிழர் கட்சி சார்பாக,  தஞ்சை மண்டலத்தில் போட்டியிடும் 35 வேட்பாளர்களை இப்போது அறிவித்துள்ளோம்.  தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு சென்னையில் மாநாடு நடத்தி, மொத்த வேட்பாளர்களையும் அறிவிப்போம். அவர்களில் 117 பெண்களும், 117 ஆண்களும் இருப்பார்கள் என்றார்.

மேலும்,  நாங்கள் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வோம் என்பதையும், எங்கள் கோரிக்கை குறித்தும்,  மக்களிடம் மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வாக்குகளை சேகரிப்பதற்காகவே, எங்களின் பிரச்சார பயணத்தை முன்கூட்டியே தொடங்கி இருப்பதாக கூறியவர்,   தஞ்சை மண்டத்தில் போட்டியிடும் 35 தொகுதிகளின் வேட்பாளர்கள் (15 பெண்கள் உட்பட)  தற்போது அறிவிக்கப்பட்டு உள்ளனர் என்றவர், அவர்களை செய்தியாளர்கள் மற்றும் பொதுமக்கள் முன்னிலையில்,  அறிமுகம் செய்து வைத்தார்.

வேட்பாளர்கள் விவரம்:

தஞ்சாவூர்- சுபா தேவி,

ஒரத்தநாடு- கந்தசாமி,

பேராவூரணி- திலிபன்,

பட்டுக்கோட்டை- கீர்த்திகா,

திருவையாறு- து.செந்தில்நாதன்,

பாபநாசம்- கிருஷ்ணகுமார்,

கும்பகோணம்- மோ.ஆனந்த்,

திருவிடைமருதூர்-திவ்யா பிரகாஷ்,

மன்னார்குடி- செ.அரவிந்த்,

திருத்துறைப்பூண்டி- ஆர்த்தி அப்துல்லா,

திருவாரூர்- வினோதினி,

மயிலாடுதுறை- காசிராமன்,

பூம்புகார்- காளியம்மாள்,

சீர்காழி- கவிதா.

நாகை- அப்பு என்கிற அகஸ்டின்ராஜ்,

வேதாரண்யம்- ராஜேந்திரன்,

கீழ்வேளூர்- பொன் இளவழகி,

அறந்தாங்கி- மு.இ.ஹிமாயூன் கபீர்,

ஆலங்குடி- திருச்செல்வம்,

திருமயம்- சிவராமன்,

புதுக்கோட்டை- சசிக்குமார்,

கந்தர்வகோட்டை- ரமீலா மோகன்,

பெரம்பலூர்- மகேஸ்வரி,

குன்னம்- அருள்,

ஜெயங்கொண்டம்- நீல மகாலிங்கம்,

அரியலூர்- சுகுணா குமார்.

திருவெறும்பூர்- சோழசூரன்,

திருச்சி கிழக்கு- பிரபு,

திருச்சி மேற்கு- வினோத்,

லால்குடி- தமிழ் பிரபா,

மண்ணச்சநல்லூர்- கிருஷ்ணசாமி,

முசிறி- ஸ்ரீதேவி,

துறையூர்- தமிழ்ச்செல்வி,

மணப்பாறை- கனிமொழி,

ஸ்ரீரங்கம்- செல்வரதி.