தமிழக சட்டமன்ற தேர்தல்: எடப்பாடி,ஸ்டாலின் உள்பட தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு இறுதி நிலவரம்….

சென்னை: தமிழக சட்டமன்ற தேர்தல்: எடப்பாடி, ஸ்டாலின் உள்பட தலைவர்கள் போட்டியிட்ட தொகுதிகளில் வாக்குப்பதிவு இறுதி நிலவரம் வெளியாகி உள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தல் நேற்று (6ந்ததி) வெற்றிகரமாக நடைபெற்று முடிந்துள்ள நிலையில், தொகுதிகள் வாரியாக  வாக்குப்பதிவின் இறுதி நிலவரம் என்ன என்பது குறித்து, தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

அதன்படி தமிழகத்தில் 72.78% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது. மாநிலத்திலேயே அதிக பட்சமாக தருமபுரி மாவட்டம் பலக்கோட்டில் 87.33% வாக்குப்பதிவு நடைபெற்றுள்ளது  அதைத்தொடர்ந்து, குமரி மாவட்டம்  குளித்தலையில் 86.15%  வாக்குப்பபதிவும், முதல்வர் போட்டியிடும் சேலம் மாவட்டம்  எடப்பாடி தொகுதியில்  85.6% வாக்குப்பதிவும், வீரபாண்டி  தொகுதியில் 85.53% வாக்குப்பதிவும் நடைபெற்றுள்ளன.

தமிழகத்திலேயே  குறைவான அளவில் வாக்குகள் பதிவான தொகுதிகள் சென்னையிலேயே இடம்பெற்றுள்ளன.   சென்னை வில்லிவாக்கம் தொகுதியில் 55.52 சதவிகிதமும்,  தியாகராய நகர்  தொகுதியில் 55.92 சதவிகிதமும்,  வேளச்சேரி தொகுதியில்  55.95 சதவிகித வாக்குகளும் பதிவாகி உள்ளன.

முக்கிய தலைவர்கள் போட்டியிடும் தொகுதிகளில் வாக்குப்பதிவு விவரம்:

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி –  எடப்பாடி 86.06%

துணைமுதல்வர் ஓபிஎஸ் – போடி தொகுதி 73.65%

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் –  கொளத்தூர்: 60.52%

பாஜக தலைவர் எல்.முருகன் –  தாராபுரம்: 74.14%

அமுமக கட்சித்தலைவர் டிடிவி தினகரன் – கோவில்பட்டி: 67.43%

திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி – சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி : 58.41%

பாஜக வேட்பாளர் குஷ்பூ – ஆயிரம் விளக்கு: 58.4%

பாஜக வேட்பாளர் அண்ணாமலை – அரவக்குறிச்சி: 81.9%

தேமுதிக பொருளாளர் பிரேமலதா – விருதாசலம்: 76.98%