சென்னை,

மிழக பட்ஜெட் கூட்டத்தொடர் பாதியிலேயே முடித்து வைக்கப்பட்ட நிலையில், தற்போது வரும் 14ந்தேதி மீண்டும் சட்டசபை கூட இருப்பதாக சட்டசபை செயலாளர் அறிவித்துள்ளார்.

எற்கனேவே ஏப்ரல் மாதம் நடைபெற்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் ,பட்ஜெட் மீதான விவாதம் மட்டுமே நடந்தது. பின்னர் ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் காரணமாக கூட்டத்தொடர் முடித்து வைக்கப்பட்டது.

மானிய கோரிக்கை குறித்து எந்தவித விவாதமும் நடைபெறவில்லை. இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தை கூட்ட வலியுறுத்தி எதிர்க்கட்சியினரும், ஆளுங்கட்சி எம்எல்ஏக்களும் கூறி வந்தனர்.

இந்நிலையில், தமிழக சட்டசபை கூட்டம் ஜூன் 14 ம் தேதி கூடுகிறது என சட்டசபை பொறுப்பு செயலாளர் பூபதி அறிவித்துள்ளார்.

ஜூன் 14ம் தேதியன்று காலை 10 மணிக்கு கூட்டப்படும் சபை கூட்டத்தில் மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டசபை அலுவல் கூட்டத்திற்கு பிறகு இந்த கூட்டம் எத்தனை நாட்கள் நடக்கும் என முடிவு செய்யப்படும் என்றும் குறைந்த ஒரு மாத காலம் கூட்டத்தொடர் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.

இந்த கூட்டத்தொடரின்போது போது  ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு துறைகளின் மானிய கோரிக்கை மீதான விவாதமும், அதற்கான  நிதி ஒதுக்கீடு குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.