தமிழக சட்டப்பேரவை: மறைந்த உறுப்பினர்களுக்கு இரங்கல் தீர்மானம்!

சென்னை:

மிழக சட்டமன்ற கூட்டத்தொடர்  இன்று  சபாநாயகர் தனபால் தலைமையில் தொடங்கியது.

இன்றைய முதல் கூட்டத்தில் மறைந்த  6 முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் எம்.பி.செழியன் மறைவுக்கு பேரவையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மறைந்த எம்எல்ஏக்கள்ன  செ.ஆறுமுகம், அ.தங்கராசு, த.ஆறுமுகம், என்.பெரியசாமி, சி.சு.மணி, பேரூர்.ஆ.நடராசன் ஆகியோருக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மேலும் மறைந்த முன்னாள் எம்.எல்.ஏக்கள் மற்றும் முன்னாள் எம்.பி.செழியன் ஆகியோருக்கு 2 நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதைத்தொடர்ந்து விவாதம் தொடங்கியது.