சென்னை:

நாடாளுமன்ற தேர்தலையொட்டி, தமிழக பாஜக தனது வேட்பாளர் உத்தேச பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளது. அந்த தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கு கன்னியாகுமரி, தூத்துக்குடி, சிவகங்கை, ராமநாதபுரம், கோவை ஆகிய 5 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  பாஜக தலைமை அறிவிக்கப்பட உள்ள உத்தேச வேட்பாளர் பட்டியலை பாஜக உறுப்பினர்  ஒருவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளார்.

அதில்,

கன்னியாகுமரி : பொன்.ராதாகிருஷ்ணன்

தூத்துக்குடி : தமிழிசை

சிவகங்கை : எச்.ராஜா

ராமநாதபுரம் : நயினார் நாகேந்திரன்

கோவை : சி.பி. ராதாகிருஷ்ணன்.

தமிழக பாஜக வேட்பாளர்கள்  யார் என்ற தகவல் வெளியாகி இருப்பது  தமிழக பாஜகவினரிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.