சென்னை:

மிழக பட்ஜெட்டில் புதிய மருத்துவ கல்லூரிகளுக்காக ரூ.1200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில்,   சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரி,  கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரி பணிகளும் மேம்படுத்தப்படும்.

‘கடலூர் மருத்துவக்கல்லூரி குறித்த அறிவிப்பில் ஏற்கெனவே அறிவித்தபடி கடலூர் அண்ணாமலை பல்கலைக்கழகத்துடன் இணைந்த மருத்துவக்கல்லூரியை அரசே ஏற்று நடத்தும்.

கடலூர் மாவட்டத்திற்கான மருத்துவக் கல்லூரியாக அது செயல்படுத்தப்படும்” என அறிவித்தார்.உயர் கல்வித்துறை – 5,052 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.

பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக பட்சமாக 34,181 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படுவதாக கூறப்பட்ட உள்ளது.

மேலும், தமிழ் வளர்ச்சித்துறைக்கு ரூ.74.08 கோடி ஒதுக்கீடும்,  தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.153 கோடி ஒதுக்கீடும் செய்யப்பட்டு உள்ளதுரு.