தமிழக பட்ஜெட் 2019-20: 2698 டாஸ்மாக் கடைகள் மூடல்… ரூ.1600 கோடி மதிப்பீட்டில் மீன்பிடி திட்டம்

சென்னை:

மிழக பட்ஜெட் தொடர் இன்று தொடங்கி உள்ள நிலையில், நிதி அமைச்சரும், துணை முதல்வருமான ஓபிஎஸ் 2019-20ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.

தமிழகத்தில் 2698 டாஸ்மாக் கடைகள் இதுவரை மூடப்பட்டுள்ளன. 7896 கடைகள் இருந்த நிலையில் தற்போது, 5198 ஆக குறைக்கப்பட்டள்ளது.

ஓபிஎஸ் மீன்பிடி தடை காலத்தில் வழங்கப்படும் நிதி உதவி திட்டத்திற்காக ரூ. 170.13 கோடி ஒதுக்கீடு

பாக் விரிகுடா பகுதியில் 1600 கோடி திட்ட மதிப்பில் மீன்பிடி திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது

முதல் கட்டமாக 500 இழுவலை படகுகளை மேம்படுத்த நிதி ஒதுக்கீடு ராமநாதபுரம் மாவட்டம், பூம்புகார் துறைமுகத்தில் மீன்பிடி உட்கட்டமைப்பு வசதிகள் மேம்படுத்தப்படுகிறது

420 கோடி செலவில் தரங்கம்பாடி உள்ளிட்ட இடங்களில் மீன்பிடி துறைமுகங்களை கட்ட அனுமதி

கன்னியாகுமரி மாவட்டம் நீரோடி, மார்த்தாண்ட துறை ஆகிய இடங்களில் கடல் அரிப்பு தடுப்பான் அமைக்கப்படும்

ஒக்கி புயலுக்கு பிறகு மீனவர்களிடமிருந்து கரையோரத்திற்கு சீரான தொலைதொடர்பு திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது

மீனவர்கள் தகவல் தொடர்புக்காக 18 உயர்மட்ட கோபுரங்கள்,

18 கட்டுப்பாட்டு அறைகள் கட்டப்பட்டுள்ளன ஆபத்து காலங்களில் 200 கடல் மைல் தூரத்திலுள்ள படகுகளை கண்காணிக்க முடியும்

வரும் நிதியாண்டில் மீன்வளத்துறைக்கு, 927.85 கோடி ஒதுக்கீடு