சென்னை:

மிழக சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், வரும் 20ந்தேதியுடன் முடிவடைவ தாக சபாநாயகர் அறிவித்து உள்ளார்.

தமிழக சட்டப்பேரவையில் இன்று 2020-21ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை துணைமுதல்வரும், நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்தார். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக பட்ஜெட் வாசித்தார். இந்த பட்ஜெட் எடப்பாடி தலைமையிலான அதிமுக அரசின் கடைசி பட்ஜெட் என்பதால், வரியில்லாத பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

இதையடுத்து, பட்ஜெட் கூட்டத்தொடர் எத்தனை நாள் நடத்தலாம் என்பது குறித்த சபாநாயகர் தலைமையில்  அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடைபெற்றது. இதில் எடுக்கப்பட்ட முடிவை சபாநாயகர் தனபால் அறிவித்து உள்ளார்.

அதன்படி, பட்ஜெட் மீதான விவாதம் , பதிலுரை 20-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. தமிழக சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் மற்றும் பதிலுரை வரும் 20-ம் தேதி வரை நடைபெறு எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கிய நிலையில், நாளையும், நாளை மறுதினமும் சனி, ஞாயிறு என்பதால் விடுமுறை. அதைத்தொடர்ந்து மீண்டும், 17ந்தேதி சட்டமன்றம் கூடும் நிலையில், 4 நாட்கள் மட்டுமே பட்ஜெட் மீதான விவாதங்களும், பதிலுரைகளும் நடைபெற உள்ளது குறிப்பிடத் தக்கது.