நாளை தமிழக பட்ஜெட்: துணைமுதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்

சென்னை:

மார்ச் 15ம் தேதி நாளை  தமிழக நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 2018-19ம் ஆண்டுக்கான பொது நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

இந்த ஆண்டின் தமிழக சட்டசபையின் முதல்கூட்டம் ஜனவரி 8ந்தேதி ஆளுநர் உரையுடன்  தொடங்கியது. ஒருவாரம் நடைபெற்ற அந்த கூட்டத்தொடர் முடிவடைந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடர் நாளை முதல்  தொடங்குவதாக சட்டசபை செயலர் அறிவித்துள்ளார்.

நாளை காலை சட்டமன்ற கூட்டம் தொடங்கியதும், காலை 10.30 மணி அளவில், தமிழக துணை முதல்வரும், நிதி அமைச்சருமான ஒபிஎஸ், தமிழக அரசின் 2018- 2019ம் ஆண்டுக்கான பட்ஜெட்  தாக்கல் செய்கிறார்.

கடந்த ஆண்டு அதிமுக இரு அணிகளாக இருந்தபோது, அமைச்சர் ஜெயக்குமார் பட்ஜெட் தாக்கல் செய்தார். இந்நிலையில் அணிகள் இணைந்தபிறகு, ஓபிஎஸ் மீண்டும் தமிழக பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Tamil Nadu budget session start on Tomorrow: Deputy CM OPS will Reads the budget, நாளை தமிழக பட்ஜெட்: துணைமுதல்வர் ஓபிஎஸ் தாக்கல் செய்கிறார்
-=-