வரும் 14ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூட்டம்…

--

சென்னை:

மிழகத்தில் வரும் 14ந்தேதி தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் கொரோனா தொற்று சென்னையில் குறைந்த நிலையில், மாவட்டங்களில் அதிகரித்து வருகிறது.  இந்த நிலையில், தமிழக அமைச்சரவை கூட்டம்  வரும் செவ்வாய்க் கிழமை (14ந்தேததி)   மாலை 5 மணிக்கு தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த கூட்டத்தில் கொரோனா பாதிப்பு, தளர்வுகள் மற்றும், அமைச்சர்கள் உள்பட எம்எம்எல்ஏ தொடர் பாதிப்பு, தமிழகத்தில் உள்ள தொழிற்சாலைகள் முழுமையாக இயங்க முடியா சூழல், மருத்துவ கல்வி இடஒதுக்கீடு உள்பட பல்வேறு பிரச்சினைகள் குறித்து விவாதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

You may have missed