சென்னை:
நாளை நடைபெற தமிழக அமைச்சரவை கூட்டத்தில், நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்கப்படும் வாய்ப்பு உள்ளதாக கோட்டை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
(தமிழக அமைச்சரவை கூட்டம் – File Photo)
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் தமிழகத்தில  அதிகரித்து வருகிறது. கடந்த ஒரு வாரமாக சென்னையில் பாதிப்பு குறைந்த நிலையில், மாவட்டங்களில் தீவிரமாகி வருகிறது. இந்த நிலையில், நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை அமைச்சரவை கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
நாளை  மாலை 5 மணிக்கு தலைமைச்செயலகத்தில்,  தமிழக அமைச்சரவை கூட்டம் முதலமைச்சர் பழனிசாமி தலைமையில் நடைபெறுகிறது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில்,  கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், மாவட்டங்களில் முழு  ஊரடங்கு  அல்படுத்துவது குறித்தும் ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன்,  மருத்துவக்கல்வி நுழைவுத் தேர்வான நீட் தேர்வு குறித்து முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு இருப்பதாகவும்,  அரசு பள்ளி மாணவர்களுக்கான இட ஒதுக்கீடு குறித்து,  இறுதி செய்யப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.
இதுமட்டுமின்றி, இந்த ஆண்டு கொரோனா சூழலால் மாணவர்கள் நீட் தேர்வுக்கு தயாராவதில் சிரமம் இருப்பதால்,  நடப்பாண்டில் 12ம் வகுப்பு மதிப்பெண் அடிப்படையில் மாணவர் சேர்க்கையை நடத்துவது குறித்தும், அதனால் ஏற்பட்டும் சட்டச்சிக்கல் குறித்தம் விவாதிக்கப்படும் என தெரிகிறது.