7 நாட்களாக நடைபெற்ற கேன் குடிநீர் விற்பனையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ்!

சென்னை:

தமிழகத்தில் கடந்த 7 நாட்களாக நடைபெற்று வந்த கேன்  குடிநீர் விற்பனையாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

மிழகத்தில் அனுமதியின்றி செயல்பட்ட  குடிநீர் ஆலைகளுக்கு சீல் வைக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழகஅரசு மாநிலம் முழுவதும் அனுமதியின்றி செயல்பட்டு வந்த 682 குடிநீர் ஆலைகளை  மூடி சீல் வைத்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேன் வாட்டர் உற்பத்தியாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு வந்தனர். இதனால் சென்னை போன்ற மாநகரங்களில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது.

இன்று சென்னை உயர்நீதிமன்றம்,  சீல் வைக்கப்பட்ட குடிநீர் ஆலைகள் மீண்டும் அரசை நாடி உரிமம் பெற்று ஆலையை நடத்தலாம் என்று உத்தரவிட்ட நிலையில்,  7 நாட்களாக நடைபெற்று வந்த கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் வேலை நிறுத்தம் வாபஸ் பெறப்பட்டது.

உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்பதாக கேன் குடிநீர் உரிமையாளர்கள் பேட்டியளித்தனர். கடந்த 7 நாட்களாள அனுமதி பெறாத குடிநீர் விநியோகிப்பவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என கூறினர்.‘