டெல்லி:

மிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு தர முடியாது என்று மத்தியஅமைச்சர் ஹர்ஷ்வர்தன் பாராளுமன்றத்தில் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளார்.

மருத்துவபடிப்பு நுழைவு தேர்வான நீட் தேர்வு நாடு முழுவதும் நடைபெற்று வருகிறது. எம.பி. பி.எஸ்.,  பி.டி.எஸ்., மருத்துவப் படிப்புகளுக்கு ‘நீட்’ நுழைவுத் தேர்வை ஆண்டுக்கு ஒருமுறை தேசிய தேர்வு முகமை நடத்தி வருகிறது. இந்த தேர்வில் இருந்து விலக்கு அளிக்கும்படி தமிழகஅரசு மற்றும் அரசியல் கட்சிகள் மத்தியஅரசிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில்,  நீட் தேர்வில் இருந்து தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கு விலக்கு அளிக்க முடியுமா? என திமுக எம்.பி டி.ஆர்.பாலு நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு எழுத்துப்பூர்வமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் அளித்துள்ள பதிலில், ‘நீட் தேர்வில் இருந்து விலக்கு கேட்கும் தமிழகம், புதுச்சேரி அரசுகளின் கோரிக்கைகளை ஏற்க முடியாது. நாடு முழுவதும் ஒரே முறையில் மருத்துவ நுழைவுத் தேர்வான நீட் தேர்வு நடத்தப்படுவதால் தமிழகம் மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு மட்டும் விலக்களிக்க முடியாது.

இந்திய மருத்துவ கவுன்சில் சட்டம் 1956ன் படி அனைத்து மாநிலங்களுக்கும் நீட் தேர்வு பொருந்தும்’ என்று கூறி உள்ளார்.