சென்னை:

மிழ்நாட்டின் முதல் நிலத்தடி அருங்காட்சியம் அரியலூர் மாவட்டம் வாரணவாசியில் இன்று திறந்து வைக்கப்பட்டது.

ரூ.2 கோடி செலவில் அமைக்கப்பட்டு வந்த அருங்காட்சியகத்தை, முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சென்னை கோட்டையில் இருந்து வீடியோ கான்பிரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

அரியலூரில் உலகிலேயே தனித்துவம் வாய்ந்த அருங்காட்சியகத்தை உருவாக்கும் நடவடிக்கை கள் எடுக்கப்பட்டு வருவதாக தொல்லியல்துறை அமைச்சர் பாண்டியராஜன் கடந்த ஆண்டு கூறியிருந்தார். இந்த திறந்தவெளி மற்றும் நிலத்தடி அருங்காட்சியகம் அமைக்கும் பணிகள் 2 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருதாகவும் கூறப்பட்டது.

இந்த மியூசியத்தில்  தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் அகழ்வராய்ச்சியின் போது கண்டெடுக்கப் பட்ட பழங்கால பொருட்கள் இங்கு காட்சிப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சுமார்  54 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள இந்த அருங்காட்சியகம் இன்று பொதுமக்கள் பயன்பாட்டுக்காக திறந்து வைக்கப்பட்டது. இதில், இந்த அருங்காட்சியகத்தில் பிரிகாம்ப்ரியன், ஜுராசிக் மற்றும் கிரெட்டேசியஸ் காலங்களிலிருந்து புதைபடிவங்கள், பாறைகள் மற்றும் தாதுக்கள் உள்ளன. இது பல மில்லியன் ஆண்டுகளுக்கு முந்தைய கடல் தோற்றம் கொண்ட பாறைகளும் காட்சிக்க வைக்கப்பட்டு உள்ளன.

டைனோசர்களும் பிற ஊர்வன மக்களும் பல ஆண்டுகளுக்கு முன்பு பிராந்தியத்தில் வாழ்ந்தனர் என்பதை நிரூபிக்கும் பாறை அமைப்புகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும்,  அருங்காட்சியகத்தின் ஒரு பகுதி சிறிய மற்றும் பெரிய மேடுகளை காட்சிப்படுத்துவதாக இருப்பதாகவும், பல   மில்லியன் கணக்கான ஆண்டுகளில் நிலத்தை உருவாக்கும் அடுக்குகளைக் குறிப்பிடுவதாக அமைந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த அருங்காட்சியகத்தில் உள்ள காட்சிகள்  புவியியலைப் படிக்க மேலும் உதவும் என்றும் கூறப்பட்டுள்ளது.