கஜா புயல் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி பயணம்

--

கஜா புயலின் பாதிப்பு தொடர்பான அறிக்கையை பிரதமர் நரேந்திர மோடியிடம் அளிப்பதற்காக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இம்மாதம் 22ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

cm

கடந்த வாரம் நாகை – வேதாரண்யம் அருகே கரையை கடந்த கஜா புயல் கிட்டத்தட்ட 15 மாவட்டங்களில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. அதிகமாக நாகை, திருப்பூர், தஞ்சை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்கள் மிகுந்த பாதிப்பை சந்தித்தன. கஜா ப்யலின் கோர தாண்டவத்தால் ஆயிரக்கணகான மரங்கள் வேரோடு சாய்ந்தன. 12ஆயிரத்திற்கும் மேற்பட்ட மின்கம்பங்கள் சேதமடைந்தன.

தாழ்வான பகுதிகளில் இருந்த லட்சத்திற்கு மேற்பட்ட மக்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டனர். புயலின் கடுமையான தாகத்தினால் கிட்டத்தட்ட 45 பேரி உயிரிழந்தனர். தற்போது தமிழக அமைச்சர்கள் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாராணப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இதுமட்டுமில்லாது புயலினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தாருக்கு தலா 10 லட்சம் ரூபாய் வழக்கப்படும் என முதலமைச்சர் பழனிச்சாமி அறிவித்தார். மேலும், கால்நடைகளையும், வீடுகளையும் இழந்தவர்களுக்கு நிவாரணம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் புயல் பாதிப்புகள் குறித்து மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்க முதலமைச்சர் பழனிச்சாமி வருகிற 22ம் தேதி டெல்லி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியது. டெல்லி பயணத்தின் போது பிரதமரை சந்தித்து எடப்பாடி பழனிச்சாமி நிவாரணத்தொகை கோர உள்ளதாகவும் கூறப்படுகிறது.