சென்னை:

மிழகத்தில் முதன்முறையாக குளிர்சாதன வசதியுடன் கூடிய மின்சாரப் பேருந்து சேவையை தமிழக முதல்வர் பழனிசாமிச்சாமி இன்று தொடங்கி வைத்து, அதில் பயணம் செய்தார்.

நாடு முழுவதும் மாசு கட்டுப்பாட்டை குறைக்கும் வகையில் மின்சாரம் மூலம் இயங்கும் வாகனங்களை உற்பத்தி செய்யவும், உபயோகப்படுத்தவும் மத்திய மாநில அரசுகள் ஊக்குவித்து வருகின்றன. அதன்படி மாநில அரசுகளும் பொதுமக்களுக்கு சேவையற்றும் பேருந்துகளையும் படிப்படியாக மின்சார பேருந்துகளாக மாற்ற முடிவு செய்துள்ளது.

தமிழகஅரசு ஏற்கனவே  எலக்ட்ரிக் பஸ்கள் விடப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்து இருந்தது. இந்த மின்சார பேருந்துகளில்,  வழித்தடத்தை கண்காணிக்கும் ஜி.பி.எஸ். வசதி, தானியங்கி கியர், தானியங்கி கதவு, தீயணைப்பு கருவி, முதலுதவி பெட்டி, கண்காணிப்பு கேமரா என அனைத்து வசதிகளும் இருக்கும் என்றும்,  மாற்றுத்திறனாளிகள் 3 சக்கர சைக்கிளுடன் பஸ்சில் ஏறுவதற்கும் இதில் வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும்  தெரிவித்தது. இந்த மின்சார பேருந்துகள் இயக்க மத்தியஅரசும் சமீபத்தில் ஒப்புதல் வழங்கியது.

இந்த நிலையில், சென்னையில் முதமனமுதவ மின்சாரப் பேருந்து சேவை இன்று தொடங்கப்பட்டு உள்ளது.

சோதனை அடிப்படையிலான மின்சாரப் பேருந்து சேவையை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவான் மியூர் வரை A1 என்ற வழித்தடத்தில் மின்சாரப் பேருந்து இயக்கப்படவுள்ளது. சென்னையில் இந்த மின்சாரப் பேருந்துகளுக்காக சார்ஜிங் ஸ்டேஷனும் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பேருந்தில் 54 பேர் பயணம் செய்யலாம். இதில் சிசிடிவி கேமராவும் பொருத்தப்பட்டுள்ளது.

நாளொன்றுக்கு அதிகபட்சமாக 200 கிலோ மீட்டர் தூரம் வரை இப்பேருந்தை இயக்கலாம். ஒரு முறை சென்ட்ரல் ரயில் நிலையம் முதல் திருவான்மியூர் சென்று மீண்டும் சென்ட்ரல் ரயில் நிலையம் வந்த பின் பேட்டரி மாற்றப்படும். பேட்டரி மாற்ற 5 முதல் 10 நிமிடங்கள் ஆகலாம் என கூறப்படுகிறது. பேட்டரி மாற்றும் ஸ்டேஷன் பல்லவன் இல்லம் அருகில் உள்ள மத்திய பணிமனையில் உள்ளது.

இப்பேருந்தில், பேட்டரி இருப்பு நிலை, வெப்பநிலை ஆகியவற்றை அவ்வப்போது கண்டறிதல், ஓட்டுநரின் செயல்பாடு, பேருந்தின் செயல்பாடு, பேருந்தில் ஏற்படும் மின்கசிவினை கண்டறிந்து, அதை தானாக செயலிழக்க வைத்தல் ஆகிய வசதிகள் உள்ளன. இந்த நவீன வசதிகளை ஒருங்கிணைத்து ரிமோட்டில் கண்காணிக்கக்கூடிய “ஐ – அலர்ட் சிஸ்டம்” பொருத்தப்பட்டுள்ளது. இந்திய சாலைகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டு, இந்திய போக்குவரத்து தரக் கட்டுப்பாடு அமைப்பினால் தகுதி சான்றும் அளிக்கப்பட்டுள்ளது. இந்த மின்சார பேருந்து மூன்று மாதம் சோதனை முறையில் இயக்கப்படவுள்ளது.

பேருந்து பவர் ஸ்டியரிங் வசதி கொண்டது. ஏர் பிரேக் வசதி கொண்டது. டியூப் லெஸ் டயர் பொருத்தப்பட்டுள்ளது. முழுமையாக குளிர்சாதன வசதி செய்யப்பட்டுள்ள இப்பேருந்தில் தானியங்கி கதவுகளும், வழித்தடங்களை அறியக்கூடிய ஜிபிஎஸ் வசதியும் உள்ளது.