முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி வரிசையில் நின்று வாக்களித்தார்… தமிழிசை, கமல்ஹாசன் வாக்கினை செலுத்தினர்

சென்னை:

ன்று தமிழகம் முழுவதும் விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சிதலைவர்கள், திரையுலக பிரபலங்கள் தங்களது வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மக்களோடு மக்களாக வரிசையில் நின்று வாக்களித்தார்… பாஜக தலைவர் தமிழிசை, மக்கள் நீதி மய்யம்  தலைவர் கமல்ஹாசன் உள்பட ஏராளமானோர் தங்கள் வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

முன்னதாக  அனைத்து வாக்குச்சாவடிகளிலும், முகவர்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்றது. வாக்குப்பதிவு இயந்திரங்களில் வாக்குகள் சரியாக பதிவாகிறதா என அதிகாரிகள் சோதனை நடைபெற்றது. அதன்பிறகே வாக்குப்பதிவு தொடங்கியது.

வெயிலின் தாக்கம் காரணமாகவும், கள்ள ஓட்டை தடுக்கும் வகையிலும்  காலைமுதலே வாக்குச்சாவடியில் ஏராளமானோர் குவியத்தொடங்கினர். விறுவிறுப்பான வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தனது சொந்த ஊரான எடப்பாடியில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள வாக்குச்சாவடியில் பாஜக தலைவர்  தமிழிசை சவுந்தரராஜன்  வாக்களித்தார்.

மக்கள் நீதி மய்யம் கட்சித்தலைவர்  கமல்ஹாசன் மற்றும் அவரது மகள் ஸ்ருதி ஹாசன் சென்னையில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாய் வரிசையில் நின்று வாக்களித்தனர். முன்னதாக  கமல் வாக்களித்த  உள்ள தேனாம்பேட்டை திருவள்ளுவர் சாலை வாக்குச்சாவடியில் மின்வெட்டால் வாக்குப்பதிவு தாமதம் ஆனது.

மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் தங்களது வாக்கினை செலுத்தி வருகின்றனர்.

கார்ட்டூன் கேலரி