டில்லியில் தமிழக முதல்வர் அறை முற்றுகை! பரபரப்பு

டில்லி,

லைநகர் டில்லி வந்துள்ள தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை பசு ஆர்வலர்கள் முற்றுகையிட்டு வருகின்றனர்.

முதல்வர் தங்கியுள்ள அறையை முற்றுகையிட்டு பசு பாதுகாப்பு ஆர்வலர்கள் ஆர்ப்பாட்டம் செய்து வருகின்றனர்.

இன்று மாலை விமானம் மூலம் தமிழகம் திரும்ப உள்ள நிலையில் அவரது அறை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். முதல்வரை சந்திக்காமல் செல்ல மாட்டோம் என்று கூறி உள்ளனர்.

தமிழ்நாடு இல்லத்தில் தங்கியுள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை விலங்குகள் நல ஆர்வலர்கள் தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்தியதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன் காரணமாக அந்த பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.