கேரள கனமழை பாதிப்பு: ரூ. 5 கோடி நிதி உதவி அளிப்பதாக தமிழக முதல்வர் அறிவிப்பு

சென்னை

னமழை காரணமாக பாதிப்படைந்துள்ள கேரளாவுக்கு ரூ. 5 கோடி நிதி உதவி அளிக்க உள்ளதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.

கடந்த சில நாட்களாக கேரளாவில் கன மழை பெய்து வருகிறது.   இந்த மழையால் 20 பேர் மரணம் அடைந்துள்ளனர்.    பந்தளம், எர்ணாகுளம் உள்ளிட்ட பல பகுதிகளில் பலர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளனர்.   மாநிலத்தில் பல பகுதிகள் உள்ள வீடுகள் நீரில் முழ்கி உள்ளன.

வெள்ளத்தால் பாதிப்படைந்த மக்களை காக்க ராணுவம் மற்றும் கடற்படையின் உதவியை கேரள் அரசு கோரி உள்ளது.   அதை ஒட்டி தேசிய பேரிடர் மேலாணமைக் குழுவினரும் கடலோர காவல்படை குழுவினரும் கேரளா வந்துள்ளனர்.   அவர்கள் தீவிர மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

இவ்வாறு கன மழையால் பாதிக்கப்பட்டுள்ள கேரள மக்களுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஆறுதல் தெரிவித்துள்ளார்.  அத்துடன் மரணம் அடைந்த 20 பேருக்கு அவர் தனது இரங்கலை தெரிவித்துள்ளார். கேரள அரசுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் மற்றும் ரூ. 5 கோடி நிதி உதவியும் அளிக்கப் போவதாக தமிழக முதல்வர் கூறி உள்ளார்.