கொரோனா சிகிச்சைக்கான உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவு

சென்னை:
கொரோனா சிகிச்சைக்கு பலன் அளிக்கும் உயிர்காக்கும் மருந்துகளை கொள்முதல் செய்ய தமிழக முதல்வர் உத்தரவிட்டு இருப்பதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமடைந்து வரும் நிலையில், கொரோனா தொற்றில் இருந்து நோயாளிகளை பாதுகாக்கும் வகையில், பலன் அளிப்பதாக கூறப்படும்  Tocilizumb, Remdesivir, Enoxaparin மருந்துகள் கொள்முதல் செய்ய தமிழக சுகாதாரத்துறை  தமிழக முதல்வர் உத்தரவிட்டு உள்ளதாக தமிழ கசுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்து உள்ளார்.
இதுவரை பாதி மருந்துகள் வந்துவிட்டன, மீதமுள்ள மருந்துகள் ஓரிரு நாளில் வந்தடையும்  என்ற கூறியவர், உயிர்காக்கும் ஊசி மருந்துகள் மாவட்ட அரசு மருத்துவமனைகளுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.