தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும்: கே.எஸ். அழகிரி

சென்னை:

மிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை வெளியாகும் என்று தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர்  கே.எஸ். அழகிரி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஏப்ரல் 18ந்தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதையொட்டி, திமுக தலைமையில், காங்கிரஸ், மதிமுக, விசிக, கம்யூ னிஸ்டு கட்சிகள், ஐஜேகே, கொங்குநாடு மக்கள் கட்சி உள்பட பல கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி உருவாக்கப்பட்டு உள்ளது.

தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களை கூட்டணி கட்சிகள் அறிவித்து, தேர்தல் பிரசாரத்தில் சுறுசுறுப்பு காட்டி வரும் நிலையில், காங்கிரஸ் வேட்பாளர்கள்  குறித்த தகவலை அகில இந்திய காங்கிரஸ் இன்னும் அறிவிக்கப்பட வில்லை.இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில், பட்டியல் வெளியாகவில்லை.

இநத நிலையில், டில்லியில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி,  மக்களவை தேர்தலில் போட்டியிடும் தமிழக காங்கிரஸ் வேட்பாளர் பட்டியல் நாளை காலை 10 மணிக்கு மீண்டும் நடைபெறும் காங்கிரஸ் மத்திய தேர்தல் குழு கூட்டத்தில் முடிவு செய்து அறிவிக்கப்படும் என தெரிவித்தார்.