தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம்!

சென்னை,

மிழக காங்கிரஸ் செயற்குழு தற்போது நடைபெற்று வருகிறது..

தமிழக காங்கிரஸ் தலைவராக திருநாவுக்கரசர் தேர்வு செய்யப்பட்ட பிறகு நடைபெறும் முதல் செயற்குழு கூட்டம் இதுவாகும்.

தமிழக காங்கிரஸ் தலைமையகமான  சத்தியமூர்த்தி பவனில் காலை 10 மணிக்கு  செயற்குழு கூட்டம் தொடங்கியது.

தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசு  செயற்குழு உறுப்பினர்களை வரவேற்று கூட்டத்தை தொடங்கி வைத்தார்.

இந்த  கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செகரட்டரி சின்னாரெட்டி சிறப்பு விருந்தின ராக கலந்துகொண்டார்.

மேலும், தமிழக காங்கிரஸ்  முன்னாள் தலைவர்கள் ஈவிகேஎஸ் இளங்கோவன், தங்கபாலு, தமிழக சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராமசாமி, முன்னாள் எம்.பி. தனுஷ்கோடி ஆதித்தன், சுதர்சன நாச்சியப்பன் உள்பட மூத்த தலைவர்கள் கலந்து கொண்டனர்.

மற்றும்,  செயற்குழு உறுப்பினர்கள்,  மாவட்ட தலைவர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர்.

நடைபெற்று வரும் செயற்குழுவில் தமிழக அரசியல் நிலவரம் குறித்தும், கட்சி வளர்ச்சி பணிகள், உள்ளாட்சி தேர்தல் குறித்தும் விவாதிக்கப்படும் என தெரிகிறது.

கார்ட்டூன் கேலரி