தகுதி நீக்கம் வழக்கில் தீர்ப்பு: தமிழக காங். தலைவர் திருநாவுக்கரசர் கருத்து

சென்னை:

18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் தொடர்பான வழக்கில் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் கருத்து தெரிவித்து உள்ளார்.

டிடிவி ஆதரவு 18 எம்எல்ஏக்களை சபாநாயகர் தனபால் தகுதி நீக்கம் செய்து உத்தரவிட்டதை எதிர்த்து சென்னை உயர்நீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று தீர்ப்பு கூறப்பட்டது. ஒரு நீதிபதி சபாநாயகர் உத்தரவு செல்லும் என்றும், மற்றொரு நீதிபதி சபாநாயகர் உத்தரவு செல்லாது என்றும் அறிவித்து, வழக்கை 3வது நீதிபதியின் விசாரணைக்கு சிபாரிசு செய்துள்ளனர்.

இந்த நிலையில் தீர்ப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ள தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்,  தீர்ப்பின் பின்னால் மோடி இருந்திருக்க கூடாதென இறைவனை பிரார்த்திக்கிறேன் என்று கூறினார்.

மேலும்,  இரு நீதிபதிகளின் தீர்ப்பு மாறுப்பட்டிருந்தாலும் அதுகுறித்து  விமர்சிக்க விரும்பவில்லை என்றும்,  3வது நீதிபதி தீர்ப்புக்கு வழங்க கால நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறினார்.

இன்றைய தீர்ப்பின் பின்னால் மோடி இருந்திருக்க கூடாதென இறைவனை பிரார்த்திப்பதாகவும் அவர் கூறினார்.

You may have missed