தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கோவிட் உதவி மையம் ! 9884466333 எண்ணை தொடர்பு கொள்ளலாம் என கே.எஸ்.அழகிரி அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி சார்பில் கோவிட் உதவி மையம் அமைக்கப்பட்டு உள்ளதாகவும், உதவி  வேண்டுவோர்  9884466333 என எண்ணை தொடர்பு கொண்டால், தேவையான உதவி வழங்கப்படும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர்  கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,  தமிழ்நாடு காங்கிரஸ் கோவிட் உதவி மையத்திற்கு மருத்துவக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள், ஒருங்கிணைப்புக் குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கீழ்க்கண்டவாறு நியமிக்கப்பட்டுள்ளனர். கொரோனாவினால் பாதிக்கப்பட்டவர்கள் தொடர்பு எண் 9884466333 மூலம் உதவி கோரினால், இக்குழுவினர் அவர்களுக்குஉரிய தகவல்களை வழங்கி ஒருங்கிணைப்பார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்துள்ளார்.