‘தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை ஆணையம்’: அரசாணை அரசிதழில் வெளியீடு

சென்னை:

மிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை அரசிதழிவில் வெளியிடப்பட்டது.

தமிழகத்தில் கடந்த 2015-ம் ஆண்டில் ஏற்பட்ட பெரு வெள்ளம். இந்த வெள்ளத்தில் சென்னை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. அதுபோல 2016ம் ஆண்டு தமிழகத்தை உலுக்கிய வார்தா புயல் போன்ற நேரங்களில்,   உடனடியாக  முடிவெடுக்க தமிழக அரசு உயர்மட்டக்குழு அமைக்க வேண்டும் என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம்  ஆலோசனை கூறியது.

இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கிலும் நீதிமன்றம் தமிழக அரசுக்கு பேரிடர் மேலாண்மை வாரியம் அமைக்க உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது.

‘இந்த நிலையில், தற்போது தமிழகத்தில் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டதற்கான அரசாணை அரசிதழில் வெளியிடப்பட்டு உள்ளது.

இந்த ஆணையத்திற்கு தமிழக முதல்வர்  எடப்பாடி பழனிசாமி தலைவராக செயல்படுவார் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் உறுப்பினராக வருவாய் துறை அமைச்சர் தலைமைச்செயலாளர் செயல்படுவார்ள் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.