உச்சநீதி மன்றம் தீர்ப்பு எதிரொலி: உள்ளாட்சி தேர்தல் தேதியை வாபஸ்பெற்றது தேர்தல் ஆணையம்

சென்னை:

மிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக உச்சநீதி மன்றம் இன்று தீர்ப்பு வழங்கிய நிலையில், ஊரக உள்ளாட்சிகளுக்கான தேர்தல் அறிவிப்பு வாபஸ் பெறுவதாக  மாநில தேர்தல் ஆணையம் அறிவித்து உள்ளது.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி பகுதிகளுக்கும் மட்டும்  உள்ளாட்சி தேர்தல் 2 கட்டங்களாக நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையர் பழனிச்சாமி கடந்த 2ந்தேதி அறிவித்தார். அதன்படி   டிசம்பர் 27, 30ந்தேதி ஆகிய இரண்டு நாட்களில் இரு கட்டங்களாக தேர்தல் வாக்குப்பதிவு நடைபெறும் என்றும், வாக்கு எண்ணிக்கை  2020ம் ஆண்டு ஜனவரி 2ந்தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

இதை எதிர்த்து, திமுக தொடர்ந்த வழக்கில் இன்று உச்சநீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதன்படி, புதியதாக தொடங்கப்பட்ட 9 மாவட்டங்கள் தவிர மற்ற மாவடட்டங்களில் தேர்தல் நடத்தலாம் என்று கூறியதாக தகவல் வெளியானது. ஆனால், திமுக வேறுவிதமாக கருத்து தெரிவித்து வருகிறது.

இந்த நிலையில், உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பாணையை வாபஸ் பெறுவதாக அறிவித்து உள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்பை முழுமையாக ஆய்வு செய்து தேர்தல் அறிவிப்பாணை வெளியிடப்படும் என்றும்,  புதிய தேர்தல் தேதி அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் மாநில தேர்தல் ஆணையர் தெரிவித்து உள்ளார்.

இதன் காரணமாக இன்று உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக புதிய அறிவிப்பு ஏதும் வெளியாக வாய்ப்பு இல்லை என்று கூறப்படுகிறது.