தமிழ்நாடு மின்வாரிய வலைத்தள முகவரிகள் மாற்றம்: நிர்வாக வசதிக்காக என அறிவிப்பு

சென்னை: தமிழ்நாடு மின்வாரிய வலைத்தள முகவரிகள் மாற்றப்பட்டு உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மின்வாரியத்தின் வலைத்தள முகவரிகள் மாற்றப்பட்டுள்ளன. இது தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:

தமிழ்நாடு மின்சார வாரியம், மின் நுகர்வோர் மற்றும் பொது மக்கள் பயன்பாட்டுக்காக “www.tangedco.gov.in, www.tantransco.gov.in மற்றும் www.tnebltd.gov.in” வலைதளங்களை நிறுவியுள்ளது. தற்பொழுது, தொழில்நுட்ப மற்றும் நிர்வாக வசதி காரணமாக மேற்கண்ட மூன்று வலைத்தளங்களின் டொமைன் பெயர்கள் மாற்றம் செய்யப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

அதன்படி தற்போது மின்சார வாரியத்தின் வலைத்தள முகவரிகள் tangedgo.org, tantransco.org மற்றும் tnebltd.org என்று மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

பொதுமக்கள் மேலே குறிப்பிட்ட வலைதள முகவரி மாற்றங்கள் மூலம் வலைதள வசதிகளை அக்டோபர் 28ம் தேதி முதல் பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.