தமிழ்நாடு: சாலை விபத்தினால் ஒரு நாளைக்கு 4 பேர் உயிரிழப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இயங்கும் அரசு பேருந்துகளால் 5 ஆண்டுகளில் 7 ஆயிரம் பேர் இறந்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. சாலை விபத்தினால் ஒரு நாளைக்கு 4 பேர் சராசரியாக இறப்பதாக கூறப்படுகிறது. கடந்த ஐந்து ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டில் நடந்த விபத்துகளினால் 6729 பேர் மரணித்துள்ளனர். இந்த விபத்துகள் தமிழ்நாட்டில் உள்ள மொத்த வாகன தொகையில் 0.7 சதவிகிதம் மட்டுமே என்று அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
buses
சாலை விபத்துகளை குறைப்பதற்காக அரசு பலகட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. வாகனங்களில் செல்லும்போது செல்போன் மற்றும் மதுபானம் உபயோகிக்க தடை விதித்தும், போக்குவரத்து காவல்துறையினரின் சோதனைகள் உள்ளிட்டவைகளை கடுமையாக்கப்பட்டும் விபத்துகள் அவ்வபோது நிகழ்ந்த வண்ணமே உள்ளன.

தமிழ்நாட்டில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து சேவைகள் மேம்பாடு அடைந்துள்ளதாக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் கூறியுள்ளார். ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது சாலை விபத்துகளினால் ஏற்படும் மரணங்கள் 1085 ல் இருந்து 1247 ஆக உயர்ந்துள்ளது.

தற்செயலாக நடைபெறும் விபத்துகளினால் அரசு சார்பில் அளிக்கப்படும் இழப்பீட்டு நிதி மட்டும் இந்த வருடத்தில் ரூ.60 கோடியை எட்டியுள்ளது. மாநில போக்குவரத்து துறை சார்பில் ஏற்படும் விபத்து நடவடிக்கையை கருத்தில் கொண்டு ஜனவரி முதல் கட்டணத்தில் மாற்றம் செய்யப்பட்டது. இதற்கு ஒரு குழு நியமிக்கப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டோருக்கு உரிய சலுகைகள் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. விபத்தினால் பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகளுக்கு உடனடியாக நிதியுதவி வழங்கப்பட்டு வருவதாக விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.

இந்நிலையில் சட்டப்பேரவையில் ஆளும் கட்சி மற்றும் எதிர்கட்சியினர் போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டதை தொடர்ந்து விவாதத்தில் ஈடுபட்டனர். ஐந்து ஆண்டுகளுக்கு பிறகு இரண்டு மட்டங்கு போக்குவரத்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக திமுகவின் செயல் தலைவரான ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். எனினும் அதிமுக அரசு மானிய விலையில் டீசல் வழங்குவதாகவும், போக்குவரத்து ஊழியர்களின் ஊதியத்தை உயர்த்தியுள்ளதாகவும், விபத்திற்கான இழப்பீடுகளை வழங்கி வருவதாகவும் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

எவ்வளவு சட்டங்கள் கடினமாக்கப்பட்டாலும் பொதுமக்கள் விழிப்புணர்வுடனும், நிதானமாகவும் பயணித்தால் மட்டுமே விபத்துகள் குறைய வாய்ப்பு உள்ளது.