தமிழக அரசின் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு அறிவிப்பு!

தமிழகத்தில் உள்ள அனைத்து ரேஷன் கார்டுகளுக்கும் பொங்கல் சிறப்பு பரிசுத் தொகுப்பு வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

pongal

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் தமிழக மக்களுக்கு அரசு சார்பில் சிறப்பு பரிசுப் பொருட்கள் வழங்கப்பட்டு வருகின்றன. அதன்படி பொங்கல் பண்டிகை வர ஒருசில நாட்களே உள்ள நிலையில், தமிழக முதலமைச்சர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதில், பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படும். முகாம்களில் தங்கியிருக்கும் தமிழர் குடும்பங்களுக்கும் இந்த பரிசுத் தொகுப்பு வழங்கப்படும்.

ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, 2 அடி கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை மற்றும் 5 கிராம் ஏலக்காய் ஆகியவை பொங்கல் பரிசுத் தொகுப்பில் இருக்கும் “ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பை அந்தந்த குடும்ப அட்டைதாரர் நியாயவிலைக்கடைகளில் பெற்றுக்கொள்ளலாம்.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


-=-