33 புதிய வீட்டுவசதி வாரிய திட்ட பணிகளுக்கு தமிழகஅரசு ஒப்புதல்…

--

சென்னை :

மிழகத்தில் வீட்டுவசதி வாரியம் மூலம் செயல்படுத்தப்பட உள்ள 33 திட்ட பணிகளுக்கு தமிழகஅரசு ஒப்புதல் வழங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகம் முழுவதும் பல்வேறு கட்டிட பணிகள் கொரோனா ஊரடங்கு காரணமாக முடக்கி வைக்கப்பட்டது. மேலும் புதியதாக தொடங்கவிருந்த பணிகளும் தடைப்பட்டன. தற்போது ஊரடங்கில் இருந்து கட்டுமான பணிகளுக்கு தளர்வு வழங்கப்பட்டுள்ளதால், மீண்டும் கட்டிடப் பணிகள் சுறுசுறுப்படைந்துள்ளன.

இந்த நிலையில்,  தமிழகம் முழுவதும், பல்வேறு இடங்களில் குடியிருப்புகள், வணிக வளாகங்கள் கட்டுவது தொடர்பான, 33 திட்டங்களை செயல்படுத்த, வீட்டு வசதி வாரிய நிர்வாக குழு ஒப்புதல் வழங்கியுள்ளது.

வீட்டு வசதி வாரியம் சார்பில், பல்வேறு மாவட்டங்களில், சுயநிதி முறையில் குடியிருப்பு திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்த திட்டங்களில், வீடுகள் விற்காமல் உள்ள நிலையில், வாரியம் புதிதாக, 33 திட்டங்களை உருவாக்கியுள்ளது.  இதற்கு சமீபத்தில் நடந்த வாரிய நிர்வாக குழு கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.