புதுச்சேரி அருகே தமிழக அரசுப் பேருந்து பெட்ரோல் ஊற்றி தீ வைப்பு

(பைல் படம்)

புதுச்சேரி:

புதுச்சேரி காலாப்பட்டு அருகே தமிழக அரசுப் பேருந்துக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். இதன் காரணமாக அந்த பஸ் எரிந்து நாசமானது.

இசிஆர் சாலை வழியாக புதுச்சேரியில் இருந்து சென்னை வந்த தமிழக அரசு பேருந்துமீது, காலாப்பட்டு பகுதியில் ஒரு கும்பல் வழிமறித்து நிறுத்தி பேருந்தின் கண்ணாடிகளை உடைத்து, பஸ்சுக்கு தீ வைத்தனர்.

தகவல் அறிந்ததும் காலாப்பட்டு தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று தீயை முழுமையாக அணைத்தனர்.

அப்போது அந்த வழியாக வந்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி,  பேருந்து எரிந்து கிடப்பதை கண்டு, காரில் இருந்து இறங்கி காவலர்களிடம் விசாரணை செய்தார். அப்போது,  புதுச்சேரியில் வன்முறைக்கு இடமில்லை என்று  கூறிவிட்டு சென்றார்.

இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த சில நாட்களாக காடுவெட்டி குடு மறைவையொட்டி அவரது ஆதரவாளர்கள் பேருந்துகளை உடைத்து வருவது குறிப்பிடத்தக்கது.