சென்னை:

மிழக சட்டமன்றத்தில் இன்று நீட் தேர்வு தொடர்பாக திமுக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தது. அதையடுத்து பேசிய எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகஅரசு மக்களை ஏமாற்றி வருகிறது என்று குற்றம் சாட்டினார்.

இது தொடர்பான விவாதத்தில் தமிழக அமைச்சரின் பதிலில் திருப்தி இல்லை என்று கூறி ஸ்டாலின் தலைமையில்  திமுக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

தமிழக சட்டசபையில் இன்று நீட் தேர்வு தொடர்பாக  கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்தார்.அப்போது நீட் தேர்வு மசோதாவை 19 மாதங்களுக்கு முன்பே  மத்திய அரசு திருப்பி அனுப்பியுள்ளது.

தமிழக அரசு இதை முன்பே சொல்லியிருந்தால் மீண்டும் மசோதாவை அனுப்பி இருக்கலாம். ஆனால்  இதை  தமிழக சட்ட அமைச்சர் மறைத்துள்ளார். இதனால், அமைச்சர் சிவி சண்முகம் பதவி விலகவேண்டும்’ என்று வலியுறுத்தினார்.

நீட் தேர்வு விவகாரத்தில் கடந்த 19 மாதங்களாக மக்களை தமிழக அரசு ஏமாற்றி உள்ளது. முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல மசோதாக்கள் நிராகரிக்கப்பட்டதை தமிழக அரசு மறைத்து விட்டது என்றும் ஸ்டாலின் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலளித்த சட்டத்துறை  அமைச்சர் சிவி சண்முகம், மசோதாக்கள் திரும்பி வந்தால் சட்டம் இயற்ற தயாராக இருக்கிறோம் . நான் பொய் சொல்லியதை நிரூபித்தால் பதவி விலகத்தயார், அப்படி  நிரூபிக்க முடியவில்லை என்றால் எதிர்க்கட்சி தலைவர் பதவியிலிருந்து விலகத் தயாரா? என்று விவாதம் செய்தார்.

இதைத்தொடர்ந்து  சண்முகத்தின் பதிலில் திருப்தியில்லை எனக் கூறி திமுக வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.