நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு மதிப்பதில்லை: உயர்நீதி மன்றம் வேதனை
சென்னை:
டிஜிட்டல் பேனர்கள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு மதிப்பதில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் வேதனை தெரிவித்து உள்ளது.
சாலைகளில் பொதுமக்களுக்கு இடையூராக வைக்கப்படும் டிஜிட்டல் பேனர்களை அகற்ற எத்தனை உத்தரவு போட்டாலும் அரசு மதிப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
சென்னையை சேர்ந்த தட்சிணாமூர்த்தி என்பவ, ஈ.சி.ஆர்., ஓ.எம்.ஆர்., ஜி.எஸ்.டி. சாலைகளில் விதிகளை மீறி டிஜிட்டல் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது. அதை அகற்ற அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.
இந்த மனுமீதான விசாரணை இன்று நடைபெற்றது. வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதி மன்றம், தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. பேனர்கள் விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு கண்டுகொள்வதில்லை என்றும், டிஜிட்டல் பேனர்களை அகற்ற எத்தனை உத்தரவு போட்டாலும் அரசு மதிப்பதில்லை என சென்னை உயர்நீதிமன்றம் வேதனை தெரிவித்து உள்ளது.
சென்னையில் சாலையோரம் விளம்பர பதாதைகள் வைக்க சென்னை உயர்நீதி மன்றம் ஏற்னவே தடை விதித்துள்ள நிலையில், நீதிமன்ற உத்தரவை மீறி ஆளுங்கட்சியினர் உள்பட அனைத்து தரப்பினரும் பேனர்கள் வைத்து வருகின்றனர்.
கடந்த மாதம் (ஜூன்) 25ந்தேதி சென்னை சாந்தோமில் வைக்கப்பட்டிருந்த அதிமுக பேனர்களை பார்த்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி இந்திரா பானர்ஜி அதுகுறித்து, தமிழக அரசின் தலைமை வழக்கறிஞரை கூப்பிட்டு அதிருப்தி தெரிவித்திருந்தார்.
அதுபோல சமீபத்தில் கடந்த 9ந்தேதி பாஜ தேசிய தலைவர் அமித்ஷா இன்று சென்னை வந்திருந்தபோது, , அவரை வரவேற்று பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் சாலை யோரங்களில் பாஜகவினர் பேனர்களை வைத்திருந்தனர்.
இதைக்கண்ட சென்னை உயர்நீதி மன்ற தலைமைநீதிபதி இந்திரா பானர்ஜி, தமிழக அரசு வழக்கறிஞரை அழைத்து சரமாரியாக கேள்வி விடுத்தார்.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவுகளை தமிழக அரசு மதிப்பதில்லை என்று சென்னை உயர்நீதி மன்றம் வேதனை தெரிவித்து உள்ளது.