10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு: புதிய அட்டவணை வெளியிட்டுள்ளது அரசு தேர்வுகள் இயக்கம்!

சென்னை:

மிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு நடைபெறும் தேதிகள் தொடர்பாக புதிய அட்டவணையை தமிழக அரசு வெளியிட்டு உள்ளது.

நடப்பு ஆண்டு முதல் மொழித்தாள் ஒரே தாளாக தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில்,  திருத்தப்பட்ட தேர்வுகால அட்டவணையை அரசு தேர்வுகள் இயக்ககம் வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த ஜூலை மாதமே 10ம் வகுப்புக்கான தேர்வு பட்டியல் வெளியான நிலையில், தற்போது திருத்தப்பட்ட தேர்வு தேதி வெளியாகி உள்ளது.

அதன்படி, 10ம் வகுப்பு பொதுத்தேர்வு, “மார்ச் 27தேதி தொடங்கி ஏப்ரல் 13ம் தேதி முடிவடைகிறது.

மார்ச் 27 ஆம் தேதி மொழிப்பாடம்,

மார்ச் 28 ஆம் தேதி விருப்ப பாடம்,

மார்ச் 31 ஆம் தேதி ஆங்கிலம்,

ஏப்ரல் 3 ஆம் தேதி சமூக அறிவியல் 

ஏப்ரல் 7 ஆம் தேதி அறிவியல்,

ஏப்ரல் 13 ஆம் தேதி கணிதத்தேர்வு

இவ்வாறு அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 4 ஆம் தேதி வெளியிடப்படும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: 10th public exminaation, new dates announced, SSLC, Tamil Nadu Government Examination Directorate
-=-