ஐபிஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு புறக்கணிக்கிறது: டிஜிபி ஜாங்கிட் குற்றச்சாட்டு

சென்னை:

பிஎஸ் அதிகாரிகளை தமிழகஅரசு புறக்கணிக்கிறது என்று,  டிஜிபி ஜாங்கிட் தலைமை செய லாளருக்கு  புகார் கடிதம் எழுதி உள்ளார். இது காவல்துறையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

எடப்பாடி தலைமையிலான அரசு ஐபிஎஸ் அதிகாரிகளுக்கு பதவி உயர்வில் முக்கியத்துவம் கொடுக்காமல், குரூப் 1 தேர்வு மூலம் காவல்துறை பணிக்கு வந்தவர்களுக்கு முக்கிய பொறுப்புகள் வழங்கப்படுவதாக சர்ச்சைகள் நீடித்து வருகிறது.

இந்த நிலையில், டிஜிபி ஜாங்கிட் அதை உறுதிப்படுத்தும் விதமாக அரசுக்கு கடிதம் எழுதி உள்ளார்.

அவர் எழுதி உள்ள கடிதத்தில்,  குரூப் 1 தேர்வு மூலம் காவல்துறை பணிக்கு வந்தவர்கள் மட்டுமே காவல்துறையில்  முக்கியப் பொறுப்புகளை வகிப்பதாகவும்,  15 எஸ்.பி.க்கள் 8 துணை ஆணை யர்கள் என 23 பேர் ஐ.பி.எஸ். அதிகாரிகளுக்குரிய பதவிகளை வகித்து வருகின்றனர். அவர் களுக்கு சரியான வாய்ப்புகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்து உள்ளார்.

மேலும் குரூப் 1 தேர்வுகளில் தேர்ச்சி பெற்று டி.எஸ்.பி.யாக பணியில் சேர்ந்தவர்களை எஸ்.பி. அல்லது துணை ஆணையர் பதவிகளில் நியமிக்கக் கூடாது என்றும், பொள்ளாச்சி வழக்கில், கடும் குற்றச்சாட்டுகளுக்குப் பின்னரும் பாண்டியராஜன் அதே பதவியில் தொடர்வது குறித்தும் கேள்வி எழுப்பி உள்ள ஜாங்கிட்,  மாநில அரசின் தேவைகளுக்கேற்ப ஐ.பி.எஸ். அல்லாத அதிகாரிகளை நியமித்தாலும் 3 மாதங்களுக்கு மேல் பணியில் தொடர மத்திய உள்துறை அமைச்சக அனுமதி பெற வேண்டும் என்ற விதி உள்ளது. ஆனால், அது பின்பற்றப்படவில்லை என்று கூறியவர்,  இனியாவது ஐ.பி.எஸ். தேர்ச்சி பெற்ற அதிகாரிகளுக்கு முக்கியப் பணிகளை வழங்க அரசு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.

ஜாக்கிட்டின் கடிதம் தமிழக காவல்துறையில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

டிஜிபி ஜாங்கிட் மீது திமுக ஆதரவாளர் என்ற முத்திரை குத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் அதிமுக அரசால் புறக்கணிக்கப்படும் நிலையில், கடந்த  2017ம் ஆண்டு  டிஜிபியாக பதவி உயர்வு வழங்கியதற்கு எதிராக  பிரியா என்பவர் தொடர்ந்த பணமோசடி வழக்கு  காரணமாக, அவரது பதவி உயர்வுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. பின்னர் தடை நீக்கப்பட்டது.

இதன் காரணமாக தமிழக அரசு டிஜிபி ஜாங்கிட்டை புறக்கணித்து வரும் நிலையில், அவர் அரசுக்கு கடிதம் எழுதி இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

You may have missed