வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வர விரும்புவோர் பதிவு செய்ய இணையதளம்… தமிழகஅரசு

சென்னை:

கொரோனா பரவல் காரணமாக வெளிநாடுகளில் சிக்கி உள்ள தமிழர்கள்,  தாயகம் திரும்ப விரும்பினால், இணையதளத்ததில் பதியும்படி, தமிழகஅரசு அறிவித்து உள்ளது. அதற்கான இணையதள முகவரியையும் வெளியிட்டு உள்ளது.

கொரேனா வைரஸ் உலகம் முழுவதும் பரவியுள்ளதால், பெரும்பாலான நாடுகளுக்கு இடையே விமானப்போக்குவரத்து உள்பட அனைத்துவிதமான போக்குவரத்து வசதிகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதனால், பல்வேறு நோக்கங்களுக்காக வெளிநாடுகளுக்கு சென்றவர்கள், வெளிநாடு களில் பணி செய்து வருபவர்கள், அங்கிருந்து வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்கள், தங்களை தாயம் அழைத்துவர ஏற்பாடு செய்யும்படி வலியுறுத்திவருகின்றனர்.

இதையடுத்து, வெளிநாடுகளில் தங்கியிருக்கும் தமிழர்கள் நாடு திரும்ப தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, பிரத்யேக இணையதள முகவரியை மிழக அரசு வெளியிட்டுள்ளது.

https://www.nonresidenttamil.org/home என்ற இணையதள முகவரியில் வெளிநாடுகளில் இருந்து தாயகம் திரும்ப விரும்பும் தமிழர்கள் தங்களது விவரங்களைப் பதிவு செய்து கொள்ளலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்திற்கு திரும்புவோரின் விவரமறிய, அவர்களை தனிமைப்படுத்தி வசதிகள் ஏற்படுத்த இந்த இணையதளத்தில் பதியலாம் என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

இந்த இணையதளத்தில், கோவிட்-19 காரணமாக பல்வேறு நாடுகளில் இருந்து தாய்நாடு திரும்ப விருப்பம் உள்ள வெளிநாடு வாழ் தமிழர்களின் விவரங்களை அறிவதற்காகவும், தனிமைப்படுத்து வதற்கான வசதிகளை ஏற்படுத்துவதற்காகவும் இத்தளம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த தகவல்கள் தேவைப்படின் சம்மந்தப்பட்ட அரசுத் துறைகளிடம் பகிரப்படும் என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

தமிழ்நாட்டிற்கு திரும்புவர்களுக்கு தனிமைபடுத்துதல் வசதிகளை ஏற்படுத்திடவும் அவர்களை பற்றிய தகவல்களை பெற இணைய பதிவு வசதி உருவாக்கம் செய்யப்பட்டு இருப்பதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது.