சென்னை:

ஸ்கீம் என்றால் என்ன என்று விளக்கம் கேட்டும், மேலும் 6 வார கால அவகாசம் கேட்டு உச்சநீதி மன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள மனுவை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்று தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.

உச்சநீதி மன்றம் அளித்த தீர்ப்பின்படி கா.மே.வா. அமைக்காத மத்திய அரசு, காலக்கெடு முடிந்த நிலையில், உச்சநீதி மன்றத்தில், பிரச்சினையை மேலும் தாமதப்படுத்த புதிய வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இந்நிலையில், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்காத மத்திய அரசு மீது உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு தரப்பில் நீதிமன்ற  அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள

இந்த சூழ்நிலையில், செய்தியாளர்களிடன் கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் சி.வி.சண்முகம், இந்த பிரச்சினையில்,   கால அவகாசம் கோரியுள்ள மத்திய அரசின் மனுவை தமிழக அரசு கடுமையாக எதிர்க்கும் என்றும், மத்திய அரசின் இந்த மனுவை விசாரிக்க கூடாது என உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.