சென்னை,

சுகாதாரத்துறையில் தமிழக அரசு முன்னோடி மாநிலமாக விளங்குவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

சென்னையில் கிண்டியில் தனியார் நட்சத்திர விடுதியில் நடைபெற்ற விழாவில் கலந்துகொண்டு பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த தகவலை தெரிவித்தார்.

கல்லீரல் நோய்த் தடுப்பு மற்றும் அறுவை சிகிச்சை தொடர்பான இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்கு சென்னையில் நடைபெறுகிறது. இந்த கருந்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்து முதல்வர் எடப்பாடி உரையாற்றினார்.

அப்போது, தமிழகம்  சுகாதாரத்துறையில் நாட்டிலேயே முன்னோடி மாநிலமாக திகழ்வதாகவும், அதற்கசான  இலக்குகளை முன்னதாகவே அடைந்துவிட்டது என்றும்,  தற்போது வளர்ந்த நாடுகளின் சுகாதார குறியீடுகளை  2023-ல் அடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

மேலும், தமிழகத்தில் உடல் உறுப்பு மாற்று சிகிச்சைக்காக தனி  ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் எளிய முறையில் ஆன்லைன் மூலம் எளிதாக பதிவு செய்து கொள்ள முடியும் என்றும் , இதுபோன்ற உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைப் பயனாளிகளுக்கு 35 லட்சம் ரூபாய் வரை காப்பீடு அளிக்கப்படுகிறது.

இவ்வாறு அவர் பேசினார்.

முன்னதாக, தமிழக மருத்துவரான முகமது ரேலா அயர்லாந்தில் பணியாற்றியபோது,  பேபன் என்ற  5 மாதப் பெண் குழந்தைக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்திருந்தார். தற்போது 20 வயதை எட்டியுள்ள அந்த பெண்ணும் இந்த கருத்தரங்குக்கு அழைக்கப்பட்டிருந்தார். அவருக்கு பூங்கொத்து கொடுத்து முதல்வர் வாழ்த்து தெரிவித்தார்.