ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்காது: அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி

சென்னை:

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தமிழக அரசு ஒருபோதும் அனுமதி வழங்காது என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறி உள்ளார்.

தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, மூடப்பட்ட தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை ஒருபோதும் திறக்க தமிழக அரசு சம்மதிக்காது என்று தெரிவித்தார்.

அதுபோல,  உச்சநீதி மன்ற தீர்ப்பு காரணமாக மூடப்பட்டுள்ள பட்டாசு ஆலைகளை திறக்கவும், பட்டாசு தொழிலாளர்களை பாதுகாக்கவும் மத்திய அரசுக்கு, தமிழக அரசு உரிய அழுத்தம் கொடுக்கும்  என்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறினார்.

ஸ்டெர்லைட் ஆலையை திறக்கலாம் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் நியமித்த ஓய்வுபெற்ற நீதிபதி, தருண்அகல்வால் குழு அறிக்கை சமர்ப்பித்துள்ள நிலையில், தூத்துக்குடி பகுதியில்  ஆலைக்கு  எதிராக மீண்டும் போராட்டம் தொடங்கி உள்ளது. இது பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், ஆலையை மீண்டும் திறக்க மாட்டோம் என்று அமைச்சர் ராஜேந்திர பாலாஜி உறுதி கொடுத்துள்ளார்.