ஆண்டுக்கு 2 முறை நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்த தமிழக அரசு எதிர்ப்பு
சென்னை:
நீட், ஜேஇஇ தேர்வுகள் பிப்ரவரி மற்றும் மே மாதங்களில் என ஆண்டுக்கு இரு முறை கணினி முறையில் நடத்தப்படும் என மத்திய மனித வள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்துள்ளார். .
இதற்கு தமிழக கல்வி அமைச்சர் செங்கோட்டையன் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஆண்டுக்கு 2 முறை நீட், ஜேஇஇ தேர்வுகள் நடத்துவது பற்றி தமிழக அரசுக்கு கடிதம் வரவில்லை.
இது குறித்து முதல்வர் பழனிச்சாமி கவனத்துக் கொண்டு செல்லப்படும். பின்னர் பிரதமர் மோடியின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும். ஆண்டுக்கு ஒரு முறை நீட் தேர்வு நடத்த மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்தும். இதுபற்றி மத்திய அரசுக்கு கடிதம் எழுதப்படும்’’ என்றார்.
திமுக செயல் தலைவர் ஸ்டாலினும் மத்திய அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாணவ மாணவிகளின் நலன் பாதிக்கும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.